Ranagalam Trailer

    கலைகளில் சிறந்து விளங்கும் தஞ்சை மண்ணின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான போர்க்காய் பற்றிய சிறு பதிவே இந்த குறும்படம். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தஞ்சை மண்ணில் பரவலாக விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டு தற்பொழுது சில கிராமங்களில் மட்டும் அரிதாகவே காணப்படுகிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் தேங்காயை பதப்படுத்தி பொங்கல் விழாவின் பொழுது இருவர் ரத்தம் சிந்த மோதிக் கொள்வதே போர்க்காய் என்ற விளையாட்டு. இந்த தகவலும் மிக அரிதாகவே கிடைக்கப் பெற்றது.

    இருகிராமங்களுக்கிடையே நிகழும் சமூக பிரச்சினையையும் மக்களின் நூற்றாண்டு கால அடிமைத்தனத்தையும் இந்த போர்க்காய் மூலம் ஒருவன் எப்படி களைந்தெறிகிறான் என்பதே இதன் மையக்கதை.

    இதில் நடித்த நிவாஸ்குமார் தான் இதைத் தயாரித்திருக்கிறார். இவர் தற்பொழுது கல்லூரியில் பணிபுரிகிறார். இவர் திரைத்துறையில் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைக்கு வரவிருக்கும் ”நளனும் நந்தினியும் “ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் இதற்கு உதவியுள்ளார். இதை எழுதி இயக்கியவர் தமிழ்ராஜா.இவர் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகப் பணிபுரிபவர். பெரியத் திரையில் இயக்குனராக முயற்சித்துக் கொண்டிருப்பவர் .

    இவர்களும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து இந்த குறும்படத்தை காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி இதில் நடித்த பெரும்பான்மையானவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான். இந்த படப்பிடிப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் கதையின் முக்கியமான போர்க்காய் விளையாட்டை அந்த கிராமத்தின் பெரும் மக்கள் கூட்டத்தை வைத்து நடத்தியிருக்கின்றனர். இது குறும்பட வரலாற்றிலேயே முதல் முறை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    Tamil Raja Director 9500043869
    Vignesh Story Writer 8220987806
    Chandrasekaran Cameraman 9003254210
    Selvamani Editor 9444194053
    Balaganesh/Sudharshan Music Directors 9840296551
    Nivas Kumaar Actor/Producer/Co Direction 9677006677
    Deena Actor 7358133563
    Vishnu Actor 9894948699